விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு பக்தர்கள் காணிக்கையாக ரூ.4¼ லட்சம் செலுத்தியிருந்தனர்
விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக கோவில்களின் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த உண்டியல்
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் விதமாக கோவில்களின் 9 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 357 ரூபாய், 185 கிராம் வெள்ளி, 400 மில்லி கிராம் தங்கம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 25 ஆயிரத்து 9 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
Next Story