கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற தொழிலாளர்கள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்தன
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றதால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாட
கிருஷ்ணகிரி,
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றதால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகைகிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) இரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஏராளமான கிறிஸ்தவர்கள் நேற்று காலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினார்கள்.
இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடியில் நின்றன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளதால் பலரும் விடுமுறைக்காக தங்களின் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கினார்கள்.
பொதுமக்கள் சிரமம்இதன் காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நேற்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்றன. ஒவ்வொரு வாகனமும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் ஆனது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் உள்ளூர் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் கட்டணமில்லாமல் செல்வதற்கு வசதியாக தனியாக பாதை உள்ளது. அந்த பாதையில் ஏராளமான கார்கள், லாரிகள் நேற்று நின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் பிளாட்பாரத்தின் மீது மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றார்கள். நேற்று காலை முதல் மதியம் வரை இதே நிலை காணப்பட்டது. அதே போல மாலை மீண்டும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.