பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு பொது இடங்களில் ‘ஸ்வைப்’ எந்திரம் வைக்கக்கோரி வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு அரசு அலுவலகங்கள் உள்பட பொது இடங்களில் ஸ்வைப் எந்திரம் வைக்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தூத்துக்குடி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார்ஆதித
மதுரை,
பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு அரசு அலுவலகங்கள் உள்பட பொது இடங்களில் ஸ்வைப் எந்திரம் வைக்கக்கோரிய வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடுதூத்துக்குடி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார்ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கடந்த மாதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகஅளவில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ள நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் சில்லறை கொடுக்க முடியாமல் வணிகர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
கடைகள், ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகஅளவில் கூடும் பல்வேறு இடங்களிலும் இதே போன்ற சிரமத்தை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் போதிய பணம் இருப்பில் இல்லை.
‘ஸ்வைப்’ எந்திரம்இதனால் பணம் இருக்கும் ஒரு சில வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையும், அதனால் நோயாளிகள் மற்றும் முதியோர் பலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.
எனவே இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ரெயில்நிலையங்கள், கோவில்கள், டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகஅளவில் கூடும் அனைத்து இடங்களிலும் ‘ஸ்வைப்’ எந்திரம் வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பதிலளிக்க உத்தரவுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.