பள்ளிபாளையத்தில் மது வாங்கித்தர மறுத்த தொழிலாளிக்கு பாட்டில் குத்து வாலிபர் கைது


பள்ளிபாளையத்தில் மது வாங்கித்தர மறுத்த தொழிலாளிக்கு பாட்டில் குத்து வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 4:15 AM IST (Updated: 23 Dec 2016 10:00 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் ஒடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருதவாணன் (வயது 37). தொழிலாளியான இவரும், இவருடைய நண்பர் ஒருவரும் அங்குள்ள மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ் (22) என்பவர் அந்த பாருக்கு வந்தார். பின்னர் அவர், தன

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் ஒடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மருதவாணன் (வயது 37). தொழிலாளியான இவரும், இவருடைய நண்பர் ஒருவரும் அங்குள்ள மதுபான பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரிதிவிராஜ் (22) என்பவர் அந்த பாருக்கு வந்தார். பின்னர் அவர், தனக்கும் மது வாங்கி கொடுக்குமாறு மருதவாணனிடம் கேட்டார். அவர் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிரிதிவிராஜ் அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து மருதவாணனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிதிவிராஜை கைது செய்தார்கள்.


Next Story