சிவகாசியில் 1 லட்சம் சினிமா பட சி.டி. கவர் பறிமுதல்; ஒருவர் கைது அச்சகத்துக்கு சீல் வைப்பு


சிவகாசியில்  1 லட்சம் சினிமா பட சி.டி. கவர் பறிமுதல்; ஒருவர் கைது அச்சகத்துக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 23 Dec 2016 10:08 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சிவகாசி நடுத்தெருவில் உள்ள அச்சகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 1 லட்சம் சினிமா பட சி.டி. கவர்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட

விருதுநகர்,

விருதுநகர் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சிவகாசி நடுத்தெருவில் உள்ள அச்சகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 1 லட்சம் சினிமா பட சி.டி. கவர்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை புதிய படத்தின் சி.டி. க்களாகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பரக்கத்துல்லா (வயது45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சி.டி. கவரினை அச்சிட ஆர்டர் கொடுத்தது யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story