நாகை அருகே மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை நாகை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு
நாகை அருகே மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது. கூலித்தொழிலாளி நாகை மாவட்டம் பொறையாறு போலீஸ் சரகம் காளியப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). கூலித்தொழிலாளி. இவரு
நாகப்பட்டினம்,
நாகை அருகே மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூலித்தொழிலாளிநாகை மாவட்டம் பொறையாறு போலீஸ் சரகம் காளியப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 4.1.2011 அன்று கணவன்–மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அமுதா, கணவனை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றினார். அப்போது சிவக்குமார் திடீரென அமுதா மீது தீவைத்துவிட்டார். இதில் படுகாயமடைந்த அமுதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா உயிரிழந்தார்.
5 ஆண்டுகள் சிறைஇதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி, மனைவியை தீவைத்து எரித்து கொலை செய்ததற்காக சிவக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.