2017–2018–ம் ஆண்டில் ரூ.3,734 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டில் ரூ.3,734 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டார். திட்ட அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் 2017–218–ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்க
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டில் ரூ.3,734 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான
திட்ட அறிக்கையை கலெக்டர் விவேகானந்தன் வெளியிட்டார்.
திட்ட அறிக்கைதர்மபுரி மாவட்டத்தில் 2017–218–ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான நபார்டு வங்கியின் திட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விவேகானந்தன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் பார்த்தசாரதி, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது:–
தர்மபுரி மாவட்டத்தில் 2017–2018–ம் ஆண்டில் ரூ.3,734 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதியில் பயிர் கடனுக்கு ரூ.1,753 கோடியே 35 லட்சமும், வேளாண் தவணை கடன் வழங்க ரூ.968 கோடியே 38 லட்சமும், பண்ணை சாராக்கடன் வழங்க ரூ.396 கோடியே 35 லட்சமும் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
4 சதவீத வளர்ச்சிஇதேபோல் கல்விக்கடனாக ரூ.94 கோடியே 95 லட்சமும், வீட்டு வசதிக்கடனாக ரூ.80 கோடியே 44 லட்சமும், ஏற்றுமதிக்கான கடனாக ரூ.4 கோடியே 65 லட்சமும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையை நபார்டு வங்கி எதார்த்தமான முறையில் மதிப்பீடு செய்துள்ளதாகவும், இந்த திட்ட இலக்கை வங்கிகள் எளிதில் அடைந்து விடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 2017–2018–ம் ஆண்டின் திட்ட இலக்கை வங்கிகள் மாநில அரசின் பல்வேறு மானியம் கொண்ட திட்டங்களோடு ஒருங்கிணைத்து பயன்பெறலாம்.
பயிர் கடன் இலக்கை அடைய உயர்ந்த தொழில்நுட்ப வேளாண் முறைகளான சொட்டு நீர்பாசனம், தெளிப்புநீர் பாசனம், திருந்திய நெல்சாகுபடி, செம்மை கரும்பு, செம்மை பயறு சாகுபடி போன்ற வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையின் ஆதரவோடு மானியங்கள் அடங்கிய திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கலாம். வேளாண் தவணை கடனை அளித்து மத்திய அரசிடம் இருந்து நபார்டு வங்கி மூலமாக மானியமும் பெறலாம். இந்த திட்ட அறிக்கையானது மத்திய அரசின் குறிக்கோளான வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சி, வருகிற 2022–ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குதல் மற்றும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.