வெளிநாட்டில் தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள் கலெக்டரிடம், பெண் மனு


வெளிநாட்டில் தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள் கலெக்டரிடம், பெண் மனு
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 23 Dec 2016 10:31 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புதுக்கோவில் மகுளிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி மாரிமுத்து. இவர், கலெக்டர் நடராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:– என் மகன் தினகரன் கடந்த 2014–ம் ஆண்டு துபாய் நாட்டில்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புதுக்கோவில் மகுளிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி மாரிமுத்து. இவர், கலெக்டர் நடராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:–

என் மகன் தினகரன் கடந்த 2014–ம் ஆண்டு துபாய் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றான். கடந்த 7 மாதங்களாக தனியார் நிறுவனத்தினர் அவனுக்கு வேலையும் கொடுக்காமல், சம்பளமும் கொடுக்காமல் அவனது பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அவன் தன்னை ஊருக்கு அனுப்பும்படி கூறியபோதும் அனுப்ப மறுத்து சித்ரவதை செய்து வருகிறார்களாம். இதுதொடர்பாக என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவன், தன்னை உயிரோடு விடமாட்டார்கள் கொன்று விடுவார்கள் என்றும், தன்னை எப்படியாவது காப்பாற்றும்படியும் கூறி கதறி அழுகிறான். எனவே, எனது மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story