ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு சிறப்பு யாக பூஜை
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி அங்குள்ள வாடிவாசல் முன்பு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. தைத்திருநாள் அலங்காநல்லூரில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழா ஆண்டு தோறும் நடத்த
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி அங்குள்ள வாடிவாசல் முன்பு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது.
தைத்திருநாள்அலங்காநல்லூரில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற தடையினால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டை நடத்த கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. இதையடுத்து தைத்திருநாள் அடுத்த மாதம் வருவதை தொடர்ந்து, இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் என்று காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராமமக்கள் என பல்வேறு பிரிவினர் ஆவலோடு எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தநிலையில் அலங்காநல்லு£ர் ஜல்லிக்கட்டு விழா நடைபெற வேண்டி, அலங்காநல்லு£ர் கிராம பொது மக்கள் சார்பில் சிறப்பு யாக பூஜை நடத்த முடிவு செய்தனர்.
யாக பூஜைஅதன்படி நேற்று அங்குள்ள வாடிவாசல் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் அலங்கார விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், முனியாண்டி, அய்யனார் சாமி மற்றும் அனைத்து கிராம தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டு, மகா கணபதி, மகா ருத்ரயாகங்கள், தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு முத்தாலம்மன், முனியாண்டி, அய்யனார் சாமி உள்ளிட்ட கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோவில்களில் உள்ள சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் கிராம பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் 504 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அலங்காநல்லூரில், பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பாக, ஜல்லிக்கட்டுக் காளை உருவத்தை வண்ணக்கோலமாக வரைந்திருந்தனர்.