திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 27–ந் தேதி நடக்கிறது
திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
திசையன்விளை,
திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆத்தங்கரை பள்ளிவாசல்
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தரங்கரை பள்ளிவாசலில் உள்ள ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்காக கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28–ந் தேதி அதிகாலை வரை நடக்கிறது. இதையொட்டி வருகிற 27–ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கத்முத் குர்ஆன் தொடக்கம், காலை 7 மணிக்கு பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல், 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல், 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.
நேர்ச்சை வினியோகம்
பள்ளிவாசல் டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தலைமையில் தர்காவில் தர்காவில் சந்தனம் மெழுகுதல் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிமுதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணிக்கு ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் நடைபெறுகிறது.
இரவு 7 மணி முதல் ஹாஜி ஹபீலுல் காதர், முகம்மது அபுபக்கர் ஆலிம் உலவி, முகம்மது இஸ்மாயில், அகமது ஷா ஆகியோர் சமய சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. 28–ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதப்பட்டு, 6 மணிக்கு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.
சிறப்பு பஸ்கள்
வழக்கம் போல் இந்த ஆண்டும் நெல்லை, திசையன்விளை, வள்ளியூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ஆத்தரங்கரை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்து உள்ளனர்.

Next Story