காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை
பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அய்யங்கொல்லியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் வாகன
பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அய்யங்கொல்லியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் வாகனங்களை வழிமறித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சாமியார் மலை அடிவாரத்தில் 10–க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் நிலையில் உள்ளன.
இதனிடையே யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன்படி பிதிர்காடு ரேஞ்சர் மனோகரன் தலைமையில், பாரஸ்டர் பத்மநாபன் மற்றும் வனத்துறையினர் அய்யங்கொல்லி செல்லும் சாலையில் 2 இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இந்த பலகையில் பொதுமக்களின் கவனத்துக்கு யானைகள் நடமாடும் பகுதி என்று எழுதப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.