குன்னூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


குன்னூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 1:16 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் குன்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மா

குன்னூர்,

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் குன்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ஆர்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆல்தொரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி, தொலை தொடர்பு துறை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், மின்வாரிய ஊழியர்கள் மத்திய அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story