ஆலாந்துறை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானை மோதலில் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல்
ஆலாந்துறை அருகே வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. அது, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். யானை இறந்து கிடந்தது கோவை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுயானை, புள்ளிமான், காட்டுபன்றி உள் ள
பேரூர்
ஆலாந்துறை அருகே வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. அது, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானை இறந்து கிடந்ததுகோவை மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டுயானை, புள்ளிமான், காட்டுபன்றி உள் ளிட்ட வனவிலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சில சமயங்களில் மனித– விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே மதுக்கரை வனச்சரகம் மங்கல்பாளையம் பிரிவு மேற்கு சுற்று மசவரம்பு பள்ளம் பகுதியில் நேற்று காலை ஒரு காட்டுயானை இறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மதுக் கரை வனச்சரக அலுவலர் தினேஷ்குமார் உத்தரவின்பேரில் வனவர் சசிக்குமார், வனக்காப்பாளர் சோழமன்னன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.
அங்கேயே புதைக்கப்படும்பின்னர் வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானைக்கு 20 வயது மதிக்கத்தக்கது. அது ஆண் யானை ஆகும். அந்த யானையின் தொடைப்பகுதியில் பலத்த காயம் இருப்பதால் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம். மேலும் காட்டுயானை இறந்து கிடக்கும் இடத்திற்கு எந்த நேரத்திலும் மற்ற யானைகள் வரலாம் என்பதாலும், மாலை நேரம் நெருங்கி விட்டதாலும், பாதுகாப்பு கருதி இறந்த காட்டுயானையின் உடல் இன்று (சனிக்கிழமை) பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்படும் என்றனர்.
கோவை வனப்பகுதியில் காட்டுயானைகள் இறப்பது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு காட்டுயானை இறந்துள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.