குமரி மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் வினியோகம் இன்று முதல் ஏ.டி.எம்.களில் கிடைக்கும் என அதிகாரி தகவல்


குமரி மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் வினியோகம் இன்று முதல் ஏ.டி.எம்.களில் கிடைக்கும் என அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 2:12 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஏ.டி.எம்.களில் கிடைக்கும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பணப்பிரச்சினை நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு மதிப்ப

நாகர்கோவில்

குமரி மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஏ.டி.எம்.களில் கிடைக்கும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பணப்பிரச்சினை

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழக்கச் செய்தது. அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். தற்போது டெபாசிட் மட்டும் செய்யப்படுகிறது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாததால் நாட்டில் ஏற்பட்ட பணப்பிரச்சினையை போக்க புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் புதிய ரூ.2000 நோட்டுகள் அனைத்து வங்கிகள் மற்றும் செயல்படும் ஏ.டி.எம்.களில் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் புதிய ரூ.500 நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்துக்கு வரவில்லை. வங்கிகளிலும் கூட புதிய ரூ.500 நோட்டுகள் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் சில்லரைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். ரூ.2000 நோட்டுக்கு சில்லரை கிடைப்பது அரிதாகவே இருந்து வந்தது.

புதிய ரூ.500 நோட்டுகள்

இதைக்கருத்தில் கொண்டு குமரி மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகளை அதிகளவில் ரிசர்வ் வங்கி வினியோகித்துள்ளது. இந்த புதிய ரூ.500 நோட்டுகள் வங்கிகளுக்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது.

இதுதொடர்பாக வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘குமரி மாவட்ட மக்கள் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு விழாவை சில்லரை தட்டுப்பாடு இல்லாமல் கொண்டாடுவதற்காக புதிய ரூ.500 நோட்டுகள் அதிகளவில் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. இதுபோல ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நாணயங்களும் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை (நேற்று) முதல் வங்கியில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் சில ஏ.டி.எம்.களில் அதிகளவில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்‘ என்றார்.

நீண்ட வரிசையில்...

குமரி மாவட்ட வங்கிகளில் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. ஏ.டி.எம்.களை பொறுத்தவரையில் சில ஏ.டி.எம்.கள் மட்டும் செயல்பட்டன. அந்த ஏ.டிஎம். மையங்கள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பணம் வைக்கப்படாததால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் திறக்கப்படவில்லை.


Next Story