ஆரணி அருகே குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


ஆரணி அருகே குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:22 AM IST (Updated: 24 Dec 2016 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

ஆரணி அருகே குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ளது கொள்ளுமேடு கிராமம். இந்த பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 12-ந் தேதி வார்தா புயல் கரையை கடந்தபோது இந்த பகுதியில் உள்ள மரங்கள் வேருடன் சரிந்தன. மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொள்ளுமேடு கிராமத்தின் ஒரு பகுதி மக்களுக்கு நேற்று முன்தினம் மின்வினியோகம் வழங்கப்பட்டது.

மற்றொரு பகுதி மக்களுக்கு மின்வினியோகம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று, தங்களுக்கு உடனடியாக மின்சாரம், குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சுப்பிரண்டு மாணிக்கம் தலைமையில் ஆரணி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை சமரசம் அடைய செய்தனர். மின்சாரம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story