விழுப்புரம்–திருவெண்ணைநல்லூர் இடையே ரெயில் பாதை பணி: நாளை முதல் 30–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


விழுப்புரம்–திருவெண்ணைநல்லூர் இடையே ரெயில் பாதை பணி: நாளை முதல் 30–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 3:23 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்– திருவெண்ணைநல்லூர் இடையே ரெயில் பாதை பணியின் காரணமாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவத

திருச்சி,

விழுப்புரம்– திருவெண்ணைநல்லூர் இடையே ரெயில் பாதை பணியின் காரணமாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

இரு வழி அகல ரெயில் பாதை

விழுப்புரம்–திருவெண்ணைநல்லூர் இடையே இரு வழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணியில் என்ஜினீயரிங் வேலைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந்தேதி வரை அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக நாளை புறப்படும். 26–ந்தேதி (திங்கட்கிழமை) மதுரை–விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விருத்தாசலம்–விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு–நெல்லை சிறப்பு ரெயில் செங்கல்பட்டில் இருந்து 45 நிமிடம் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

வைகை எக்ஸ்பிரஸ்

27–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம், கடலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும். மேலும் அன்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து 45 நிமிடம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு புறப்படும். மேலும் மதுரை–விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விருத்தாசலம்–விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

வருகிற 28–ந்தேதி (புதன்கிழமை) ரெயில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் பற்றி விவரம் வருமாறு:

*மதுரை–விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விருத்தாசலம்–விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

*சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்.

*மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம், கடலூர், விழுப்புரம் வழியாக செல்லும்.

*மும்பை–நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்.

*குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்திற்கு 30 நிமிடம் தாமதமாக வரும்.

*சென்னை–மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 2.30 மணிக்கு புறப்படும்.

மும்பை எக்ஸ்பிரஸ்

29–ந்தேதிக்கான (வியாழக்கிழமை) ரெயில்கள்:–

*சென்னை–மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து 45 நிமிடம் தாமதமாக பகல் 2.15 மணிக்கு புறப்படும்.

*நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம், கடலூர், விழுப்புரம் வழியாக செல்லும்.

*மதுரை–விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விருத்தாசலம்–விழுப்புரம் இடையே இயக்கப்படாது.

புதுச்சேரி பயணிகள் ரெயில் ரத்து

30–ந்தேதி (வெள்ளிக்கிழமை) ரெயில் போக்குவரத்து மாற்றம் விவரம்:–

*மதுரை–சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம், கடலூர், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

*சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம் மார்க்கமாக செல்லும்.

*சென்னை–மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்படும்.

*திருச்சி–சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக பகல் 12.35 மணிக்கு புறப்படும்.

*குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்திற்கு 30 நிமிடம் தாமதமாக வரும்.

*விழுப்புரம்–புதுச்சேரி–விழுப்புரம் பயணிகள் ரெயில் ரத்து.

*மதுரை–விழுப்புரம்–மதுரை பயணிகள் ரெயில் விருத்தாசலம்–விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

*மேல்மருவத்தூர்–விழுப்புரம்–மேல்மருவத்தூர் பயணிகள் ரெயில் திண்டிவனம்–விழுப்புரம் இடையே இயக்கப்படாது.

*மயிலாடுதுறை–விழுப்புரம் பயணிகள் ரெயில் பண்ருட்டி–விழுப்புரம் இடையே சேவை கிடையாது.

*சென்னை–புதுச்சேரி பயணிகள் ரெயில் திண்டிவனம்–புதுச்சேரி இடையேயும், புதுச்சேரி–திருப்பதி பயணிகள் ரெயில் புதுச்சேரி–திண்டிவனம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்திலும் இயக்கப்படும் போது மேற்கண்ட 2 ரெயில்களும் திண்டிவனம்–புதுச்சேரி இடையே சேவை கிடையாது.

*விழுப்புரம்–திருப்பதி பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து ஒரு மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக மாலை 6 மணிக்கு புறப்படும்.

*செங்கல்பட்டு–நெல்லை சிறப்பு ரெயில் செங்கல்பட்டில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக மாலை 3.45 மணிக்கு புறப்படும்.


Next Story