ரெயில்வே கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.க்கள் வெளிநடப்பு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை என புகார்
ரெயில்வேயில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை என புகார் தெரிவித்து திருச்சியில் ரெயில்வே அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். கலந்தாய்வு கூட்டம் தெற்கு ரெயில்வேயில் திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்
திருச்சி,
ரெயில்வேயில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை என புகார் தெரிவித்து திருச்சியில் ரெயில்வே அதிகாரிகளுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கலந்தாய்வு கூட்டம்தெற்கு ரெயில்வேயில் திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட எம்.பி.க்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் உள்ள ரெயில்வே பயிற்சி பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட 35 எம்.பி.க்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
நேற்று காலை 10 மணிக்கு கூட்ட அரங்கத்திற்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி மற்றும் ரெயில்வே அதிகாரிகள் வந்தனர். காலை 10.30 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெளிநடப்புகூட்டத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி.க்கள் குமார் (திருச்சி), ராஜேந்திரன் (விழுப்புரம்), அருண்மொழிதேவன் (கடலூர்), செந்தில்நாதன் (சிவகங்கை), பரசுராமன் (தஞ்சாவூர்), சந்திரகாசி (சிதம்பரம்), பார்த்திபன் (தேனி), உதயகுமார் (திண்டுக்கல்), அன்வர்ராஜா (ராமநாதபுரம்), ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி) ஆகிய 11 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். மற்ற 24 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோரி தலைமை தாங்கி பேசினார். கூட்டம் தொடங்கியதும் எம்.பி.க்கள் சிலர் பேசினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து சிறிது நேரத்தில் காலை 11.15 மணி அளவில் எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இரு வழி அகல ரெயில் பாதைகூட்டத்தில் இருந்து வெளியே வந்த எம்.பி.க்களை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார்கார்க் ஆகியோர் சமாதானப்படுத்தினர். ஆனால் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர்.
அப்போது ரெயில்வேயில் நிதி இல்லாததால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. உங்களிடம் நிதி பெற்று பணிகளை மேற்கொள்ள தான் இந்த கூட்டம் என சுனில்குமார் கார்க் கூறினார். அதற்கு சிவா எம்.பி., ‘ரெயில்வேக்கு எவ்வளவு நிதி வேண்டும் என சொல்லுங்கள் ஒதுக்கி தருகிறோம்’ என்றார்.
விழுப்புரம்–திண்டுக்கல் இடையே இரு வழி அகல ரெயில் பாதை பணி வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி நிருபர்களிடம் கூறினார்.