3 லாரிகள் அடுத்தடுத்து மோதல் விபத்தில் சிக்கிய 3 பேர் 2 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து பப்பாளி பழங்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. நேற்று அதிகாலையில் காஞ்சீபுரத்தை அடுத்த
காஞ்சீபுரம்,
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து பப்பாளி பழங்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. நேற்று அதிகாலையில் காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதிக்கு அருகே வந்த போது இந்த மினி லாரிக்கு பின்னால், பெங்களூருவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த 2 லாரிகளுக்கும் முன்னால் மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டயர் திடீரென வெடித்ததால், அது நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக சென்றது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த மினிலாரியும் மற்றொரு லாரியும் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பப்பாளி பழங்களை ஏற்றி வந்த மினிலாரி தலைகீழாக கவிழ்ந்து உருக்குலைந்து போனது. மினி லாரியின் டிரைவர் சந்தோஷ் மற்றும் நவீன், விமலநாதன் ஆகியோர் வெளியே வர முடியாதபடி லாரியின் சிதைவுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story