கொரட்டூரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் பார் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது


கொரட்டூரில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் பார் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 3:50 AM IST (Updated: 24 Dec 2016 3:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வில்லிவாக்கம் பாபா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன்(வயது 42). இவர், கொரட்டூர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்

ஆவடி,

சென்னை வில்லிவாக்கம் பாபா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன்(வயது 42). இவர், கொரட்டூர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நரசிம்மன், விற்பனையாளர் இருவரும் கடையை பூட்டி விட்டு வெளியே வந்தனர்.

அப்போது டாஸ்மாக் கடை பார் உரிமையாளரான கொரட்டூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த சுரேஷ்(32) மற்றும் பார் ஊழியர்களான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு(21), ரவி(21) மற்றும் ரங்கன்(21) ஆகியோர் சேர்ந்து நரசிம்மனையும், விற்பனையாளரையும் பாருக்கு மது பாட்டில்களை தர மறுப்பதாக கூறி கைகளால் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நரசிம்மன் அளித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்பட 4 பேரையும் நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story