அட்டவணை இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடுங்கள் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
அட்டவணை இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடுங்கள் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார். ஆய்வுக்கூட்டம் புதுவை தலைமை செயலகத்தில் நடப்பு நிதியாண்டு அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்டத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்
புதுச்சேரி
அட்டவணை இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிடுங்கள் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வுக்கூட்டம்புதுவை தலைமை செயலகத்தில் நடப்பு நிதியாண்டு அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்டத்தின் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்டத்தினை புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தும் துறைகளின் இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.
50 சதவீதம்...கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசும்போது, ‘அனைத்து இயக்குனர்களும் அட்டவணை இனத்தவருக்கான துணைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மூலம், அந்த மக்களுக்கு நேரடியாக சென்றடைவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியை முறையாக செயல்படுத்த வேண்டும். கடந்த நவம்பர் மாதம் வரை மொத்தமாக 50 சதவீத செலவினத்தை இத்திட்டம் பெற்றுள்ளது. ஆனால் பல துறைகள் இந்த சதவீதத்தை எட்டாமல் குறைவாகவே செலவு செய்துள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் செலவு செய்யாதபட்சத்தில் அந்த துறைக்கு ஒதுக்கீடு செய்த நிதி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்படும்’ என்று கூறினார்.
நேரடி பயன்எனவே சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இந்த நிதியாண்டிற்குள் ஒதுக்கீடு செய்த அனைத்து நிதியையும் அட்டவணை இன மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து துறை இயக்குனர்களையும் அமைச்சர் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.