நான்கு வழிச்சாலை பணிக்கு செம்மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
மானாமதுரை அருகே பள்ளமீட்டான் கிராமத்தில் அரசு அனுமதியுடன் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் அள்ளப்படுவதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டம் மதுரை–பரமக்குடி இடையே உள்ள 75 கி.மீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மா
மானாமதுரை,
மானாமதுரை அருகே பள்ளமீட்டான் கிராமத்தில் அரசு அனுமதியுடன் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் அள்ளப்படுவதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம்மதுரை–பரமக்குடி இடையே உள்ள 75 கி.மீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளி சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளமீட்டான் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் செம்மண் எடுக்க அரசு அனுமதி பெற்றது. நேற்று காலை முதல் மணல் அள்ள நிறுவனம் ஏற்பாடு செய்து, மணல் அள்ளி லாரியில் ஏற்றியது. இதுகுறித்து தகவலறிந்து பள்ளமீட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணல் ஏற்றி சென்ற லாரியை மறித்து போராட்டம் நடத்தினர். மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும், இதனால் கிராமத்திற்கு பாதிப்பு உள்ளது என்றும் கூறி போராட்டம் நடத்தினர். மேலும் கிராமமக்கள் மணல் அள்ளி லாரிகளை மறித்து முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தைஇதுகுத்து தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவகுமாரி, போராட்டம் நடத்திய கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தாசில்தார் சிவகுமாரி கூறும்போது, நான்கு வழிச்சாலைக்கு தேவையான மண் எடுக்க தனியார் நிறுவனம் முறையாக அனுமதி பெற்று குவாரி அமைத்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் கிராமமக்கள் கலெக்டரை சந்திக்க அறிவுறுத்திப்படுகிறார்கள். நான்கு வழிச்சாலை பல இடங்களில் புதிதாக அமைக்கப்படுகிறது. புதிய இடங்கள் பலவும் நன்செய் நிலங்களாக இருப்பதால் சாலையை கெட்டியாக அமைக்க செம்மண் அதிக அளவு தேவைப்படுகிறது. ஆனால் முறையாக அனுமதி வாங்கி குவாரி அமைத்து மணல் அள்ளுவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால் சிவகங்கை மாவட்டத்தில் சாலைப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்றார்.