கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும் சேலம் சரக டி.ஐ.ஜி. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும் என்று சேலம் டி.ஐ.ஜி. நாகராஜன், போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆவணங்கள்ஆய்வு தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை பணிகள், சட்டம்–ஒழுங்கு பராமரிப்
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும் என்று சேலம் டி.ஐ.ஜி. நாகராஜன், போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆவணங்கள்ஆய்வுதர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை பணிகள், சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு குறித்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் நேரில் ஆய்வு நடத்தினார். தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் புகைப்பட பிரிவு, தனிப்பிரிவு அலுவலகம், கைரேகை பிரிவு, மாவட்ட குற்றப்பதிவு கூடம் ஆகியவற்றை அவ நேரில் பார்வையிட்டார். அப்போது அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். ஆயுதப்படையில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கருவிகள், ஆயுதப்படை வாகனங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தேடப்படும் குற்றவாளிகள்இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த டி.ஐ.ஜி. நாகராஜன், குற்ற பதிவேடுகளை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்தும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வேண்டும். வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.