நினைவு தினம் அனுசரிப்பு: எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 28–வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சி
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நினைவு தினம்நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 28–வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேந்தமங்கலம் பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் கென்னடி, பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.சண்முகம், துணைத்தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய துணைச்செயலாளர் ஜி.கே.வீரப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதேபோல நாமக்கல் சேலம் ரோடு நேதாஜி சிலை அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை திடலில் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் சேகர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராசிபுரம்ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஆர்.வி.மகாலிங்கம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர்கள் எஸ்.பி.கந்தசாமி, வெங்கடாசலம், நகர பொருளாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சீரங்கன், ஸ்ரீதர், ரமேஷ் அமல்ராஜ், சீனிவாசன், அருணாசலம், பரமேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கலைவாணி, மாவட்ட பிரதிநிதிகள் ரங்கசாமி, சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடுதிருச்செங்கோட்டில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இதையொட்டி திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்த இந்த மவுன ஊர்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது.
இதில் அ.தி.மு.க. நிர்வாகி பொன்னுசாமி, மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் மற்றும் நகர நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.