வேப்பூர் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு
வேப்பூர் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரும்பு ஏற்றிக்கொண்டு... விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் மாலை கரும்பு ஏற்ற
வேப்பூர்,
வேப்பூர் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரும்பு ஏற்றிக்கொண்டு...விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் மாலை கரும்பு ஏற்றிக்கொண்டு திருச்சியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை எலவனாசூர்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார். வேப்பூர் கூட்டுரோட்டில் சென்று கொண்டிருந்த போது, லாரியின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போக்குவரத்து பாதிப்புஇதில் இடுபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.