மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி வருகிற 3–ந் தேதி நடக்கிறது


மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி வருகிற 3–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 25 Dec 2016 2:30 AM IST (Updated: 24 Dec 2016 7:23 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 3–ந் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– விளையாட்டு போட்டிகள் தமிழ்

வேலூர்,

வேலூர் மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 3–ந் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவின் மூலம் அரசு பணியாளர்களுக்கு 2016–17ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 3–ந் தேதி வேலூரில் நடக்கிறது.

இதில் ஆண்களுக்கு தடகள பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகியவை நடத்தப்படுகிறது. அதேபோல் பெண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகியவை நடக்கிறது.

ஆண்களுக்கு மட்டும் கால்பந்து போட்டியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே கபடி, கைப்பந்து, இறகுபந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

கூடைப்பந்து

வேலூர் ஈ.வெ.ரா. பூங்காவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே கூடைப்பந்து போட்டியும், வேலூர் ஓட்டேரியில் உள்ள செவன்த் டே பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே டென்னிஸ் போட்டியும் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் அந்தந்த இடங்களில் காலை 8 மணி முதல் தொடங்கப்படும்.

இந்த போட்டிகளில் அரசுத்துறைகளில் முழுநேரம் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்கள், காவல்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், விளையாட்டு அலுவலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்க தகுதியுடையவராவர். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போட்டி நாளன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

பயணப்படி

போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு உரிய தினப்படி மற்றம் பயணப்படி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஏற்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்க இயலாது.

மாவட்ட அளவிலான போட்டிகளின் போது தடகளப் போட்டிகளில் மற்றும் குழுப்போட்டிகளில் முதலாமிடம் பெற்றும் வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிகளில் பங்கேற்கும் போது அவர்களுக்கு ஆணையத்தால் சீருடை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story