கடலூர் முதுநகரில் பெண், தீக்குளித்து தற்கொலை


கடலூர் முதுநகரில் பெண், தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Dec 2016 4:15 AM IST (Updated: 24 Dec 2016 9:32 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வள்ளி(வயது 48). இவர்களது மகன் தங்கமணி(18) கடந்த ஆண்டு இறந்தார். இதன் பிறகு ராஜா சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வள்ளி, சம்பவத்தன்று வீட்ட

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி வள்ளி(வயது 48). இவர்களது மகன் தங்கமணி(18) கடந்த ஆண்டு இறந்தார். இதன் பிறகு ராஜா சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வள்ளி, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றித தீ வைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story