கந்தம்பாளையம் அருகே பள்ளி தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கந்தம்பாளையம் அருகே பெரியசூரம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லட்சுமி (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து பரமத்திவேலூரில் உள்ள வீட்டிற்கு மொபட்டில் ப
கந்தம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கந்தம்பாளையம் அருகே பெரியசூரம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லட்சுமி (வயது 52). இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து பரமத்திவேலூரில் உள்ள வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டுச்சென்றார்.
வழியில் புளியம்பட்டி என்ற இடத்தில் அவர் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். திடீரென அவர்கள் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார்கள். இதுகுறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச்சென்ற 2 மர்ம ஆசாமிகளையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story