தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 118 பேர் கைது


தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 118 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 9:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 118 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற முக்கிய அணைகளில

தஞ்சாவூர்,

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற முக்கிய அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. காவிரிடெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பயிர் கருகியதால் மனவேதனையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் நேற்று தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் சபிஅகமது, இணையதள பொறுப்பாளர் சரீப்ராசிக், கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் சக்கரை கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

118 பேர் கைது

இதில் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடர், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், இணை பொதுச் செயலாளர் மெகராஜ்தீன், மாநில துணைத் தலைவர் சென்னியப்பன் மகான், பொருளாளர் நஜ்முதீன், துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், தலைமை நிலைய செயலாளர் யூசுப்கான், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தலைமை தபால் நிலையத்திற்குள் யாரும் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக நுழைவு கதவு பூட்டப்பட்டதுடன், வெளியே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளும் போடப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் 10 நிமிடம் நடந்தது. இதையொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 118 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.


Next Story