நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி


நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 10:03 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு தினம் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு

பரமக்குடி,

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவு தினம்

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு முத்தையா எம்.எல்.ஏ. தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைமை கழக பேச்சாளர் ஜமால் முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பொதுவக்குடி செந்தில், முன்னாள் நகரசபை தலைவர் ஜெய்சங்கர், பேரவை துணை செயலாளர் அழகர், இலக்கிய அணி செயலாளர் திலகர், நகர் துணை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர் செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ராமநாதபுரம் நகர வீட்டுவசதி வாரிய தலைவர் ராமசேது, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர்.சீனிவாசன், துணை தலைவர் கண்ணன், அரசு பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் குமார், மகேஷ், ஜெகநாதன், ஆசிக், விஜயன், மனோகரன், முகமது யாக்கூப், காதர் மைதீன், மங்களநாதசேதுபதி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணா தியேட்டர் அருகில்...

பரமக்குடி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் கணேசன் தலைமைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், அவை தலைவர் நயினாமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திசைநாதன், முன்னாள் நகர் செயலாளர் ஜபருல்லாகான், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சிவக்குமார், நகர் இளைஞரணி செயலாளர் கோல்டன் சுரேஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர துணை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகரசபை கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முதுகுளத்தூர்–நயினார்கோவில்

முதுகுளத்தூரில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல கடலாடியில் ஒன்றிய அவை தலைவர் மகேந்திரன், ஊராட்சி கழக செயலாளர் வேல்ச்சாமி, வக்கீல் பாண்டியன் உள்பட அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் முகமது ரபீக் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சரண்யா மெட்ரிக் பள்ளியில் அதன் தாளாளர் பால்சாமி எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நயினார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அவைத்தலைவர் சுந்தர்ராஜ், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் ரஜினிகாந்த், முன்னாள் ஊராட்சி தலைவர் சரசுவதி நாகலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் செல்லப்பாண்டி, நயினார்கோவில் கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story