விழுப்புரத்தில் ஆசிரியையிடம் நகையை பறித்த வாலிபர் கைது


விழுப்புரத்தில் ஆசிரியையிடம் நகையை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 10:51 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஆசிரியையிடம் நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆசிரியையிடம் நகை பறிப்பு திருக்கோவிலூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் சென்னை பள்ளிகரணை பகுதியில் தங்கியிருந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவ

விழுப்புரம்,

விழுப்புரத்தில் ஆசிரியையிடம் நகையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியையிடம் நகை பறிப்பு

திருக்கோவிலூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் சென்னை பள்ளிகரணை பகுதியில் தங்கியிருந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (வயது 33). இவர் திருக்கோவிலூர் அருகே வி.புத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டதையடுத்து அந்த விடுமுறையை கழிப்பதற்காக சரண்யா தனது 2 மகள்கள் மற்றும் மாமனார், மாமியாருடன் சென்னையில் உள்ள தனது கணவரை பார்க்க சென்றார்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த இவர்கள் அங்கிருந்து சென்னை செல்லும் பஸ்சில் ஏறினார்கள். இந்த பஸ் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் சீரான வேகத்தில் சென்றபோது ஒரு வாலிபர் திடீரென சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் கைது

இதனிடையே வாலிபர் ஒருவர் ஓடுவதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சந்தேகத்தின்பேரில் அந்த வாலிபரை துரத்திச்சென்று பிடித்து தர்ம அடி கொடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் செஞ்சியை அடுத்த கஞ்சனூர் அருகே உள்ள பூண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாலு (வயது 33) என்பதும் சரண்யாவின் நகையை பறித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, பாலுவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலுவை, விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story