கள்ளக்குறிச்சி பூச்சி மருந்து கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு


கள்ளக்குறிச்சி பூச்சி மருந்து கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 10:55 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பூச்சி மருந்து கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டனர். காலாவதியான பூச்சி மருந்துகள் கள்ளக்குறிச்சியில் உள்ள பூச்சி மருந்து கடைகளுக்கு நேற்று வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி பூச்சி மருந்து கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டனர்.

காலாவதியான பூச்சி மருந்துகள்

கள்ளக்குறிச்சியில் உள்ள பூச்சி மருந்து கடைகளுக்கு நேற்று வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் திடீரென சென்றனர். பின்னர் அவர்கள், கடைகளில் காலாவதியான பூச்சி மருத்துகள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடை வைப்பதற்கான உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்றும், விவசாயிகளுக்கு சரியான விலையில் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? எனவும் ஆய்வு செய்தனர். பின்னர் வேளாண் அதிகாரிகள், அங்கிருந்த கடை உரிமையாளர்களிடம் பூச்சி மருந்துகள் வாங்கும் விவசாயிகளுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும்.

மேலும் மருந்துகளை வாங்கிச்செல்லும் விவசாயிகள் குறித்த விவரங்களை சரியான முறையில் சேகரித்து வைக்க வேண்டும். குறிப்பாக காலாவதியான பூச்சி மருந்துகளை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆய்வின் போது வேளாண் அலுவலர்கள் அன்பழகன், செந்தில், கங்காகவுரி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story