பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார முன்எச்சரிக்கை நடவடிக்கை


பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார முன்எச்சரிக்கை நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 11:04 PM IST)
t-max-icont-min-icon

பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுகாதார நடவடிக்கை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், பேரையூர் பேரூராட்சி பகு

பேரையூர்,

பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சுகாதார நடவடிக்கை

மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், பேரையூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீதிகள், தெருக்கள், பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தெருக்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு, தேங்கி கிடந்த தண்ணீரில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது. சுகாதரம் பற்றிய விழிப்புணர்வு ஓவியங்கள், பஸ்நிலையம், மற்றும் முக்கிய இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் தேடி எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தெருக்களில் உள்ள சாக்கடைகள், கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள், சுத்தப்படுத்தப்பட்டன. பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துப்பரவு பணியாளர்கள், வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரியும், டெங்கு வராமல் தடுக்கும் நடவடிக்கை குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

ஊர்வலம்

மேலும் பேரையூர் பகுதியில் சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் புதுவாழ்வுத்திட்ட மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன், தலைமையில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தாமோதரன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதாபரமேஸ்வரி, சுகாதர மேற்பார்வையாளர் சரபோஜி, ஆய்வாளர் சண்முகவேல், நர்சுகள் சுந்தரேஸ்வரி, தேவகி, சமாதேவி, சொர்ணா, மருத்துவ ஊழியர்கள் பால்ராஜ், விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சுகாதார விழிப்புணர்வு ஊர்வலத்தில் வீடுகள் தோறும் கழிப்பறை, திறந்த வெளியை அசுத்தம் செய்தல் பற்றி விழிப்புணர்வு அடங்கிய அட்டைகளை தாங்கி, கோஷமிட்டு சென்றனர். ஊர்வலம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.


Next Story