சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்


சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2016 11:15 PM IST (Updated: 24 Dec 2016 11:14 PM IST)
t-max-icont-min-icon

சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஓய்வூதிய உதவித்தொகை விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்

திருவாரூர்,

சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஓய்வூதிய உதவித்தொகை

விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்ச தகுதியாக தேசியஅளவு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று இருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், 2–ம் இடம், 3–ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

மேலும் 2016 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டு சான்றிதழ் நகல்கள், வருமான சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

ஜனவரி 31–ந்தேதிக்குள்

முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறதகுதி இல்லை. விண்ணப்பிக்கும் முறையானது நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை அவர்கள் பெற்ற விளையாட்டு சான்றிதழ் நகலுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி, அலுவலக வேலை நாட்களில் பெற்று கொள்ளலாம்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகிற (ஜனவரி) மாதம் 31–ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story