வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணியிடம் நகை திருடிய வாலிபர் கைது 7 மாதத்திற்கு பிறகு பிடிபட்டார்
வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணியிடம் நகையை திருடிய வாலிபரை போலீசார் 7 மாதத்திற்கு பிறகு கைது செய்தனர். தேடுதல் வேட்டை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறைச்சிக்குளம் தசேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி பானு (வயது42). பேராசிரியை. இவர
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணியிடம் நகையை திருடிய வாலிபரை போலீசார் 7 மாதத்திற்கு பிறகு கைது செய்தனர்.
தேடுதல் வேட்டைகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறைச்சிக்குளம் தசேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி பானு (வயது42). பேராசிரியை. இவர்கள் கடந்த மே மாதம் 21–ந்தேதி குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காரில் வந்துள்ளனர். அப்போது பேராலயத்தின் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி வாசலில் காரை நிறுத்திவிட்டு அறை எடுப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது காரில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் யாரோ திருடி சென்றுவிட்டார். அந்த பையில் 32 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளன. இதுகுறித்து பானு வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் காரில் 32 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர் நாகை பகுதியில் சுற்றி திரிவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் நாகையில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நகைகள் பறிமுதல்அப்போது நாகை நாலுகால் மண்டபம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த துரை மகன் மணிகண்டன் (வயது36) என்பதும், இவர் வேளாங்கண்ணியில் சுற்றுலா வந்தவரிடம் 32 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவர் திருடிய நகைகளை திருச்சியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சிக்கு சென்று நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டனை கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சுற்றுலா பயணியிடம் நகைகளை திருடிய மணிகண்டனை போலீசார் 7 மாதத்திற்கு பிறகு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.