அலங்காநல்லூரில் 3–ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்: கோவில்பட்டியில் இருந்து 60 வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


அலங்காநல்லூரில் 3–ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்: கோவில்பட்டியில் இருந்து 60 வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும்  தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Dec 2016 2:30 AM IST (Updated: 24 Dec 2016 11:47 PM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரில் வருகிற 3–ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து 60 வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டி

கோவில்பட்டி,

அலங்காநல்லூரில் வருகிற 3–ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து 60 வாகனங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நேற்று காலையில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பெருமாள், பொருளாளர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், அன்புராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி ராஜகுரு, நெசவாளர் அணி ராதாகிருஷ்ணன், கலை இலக்கிய அணி ஜெயகுமார், மணி, இளைஞர் அணி அய்யாத்துரை பாண்டியன், மகளிர் தொண்டர் அணி இந்துமதி, மாணவர் அணி மார்ட்டின், சேதுரத்தினம், நகர செயலாளர்கள் கருணாநிதி, பாரதி கணேசன், வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், நவநீதகிருஷ்ணன் (கோவில்பட்டி), வேலாயுதபெருமாள், சின்ன மாரிமுத்து (விளாத்திகுளம்), சின்னபாண்டியன் (கயத்தாறு), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மகராஜன் (கருங்குளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

60 வாகனங்களில்...

கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகிற 3–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அலங்காநல்லூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோவில்பட்டி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து 60 வாகனங்களில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக புறப்பட்டு செல்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story