தூத்துக்குடியில் லாரிகளில் கோதுமை கடத்திய 3 பேர் கைது


தூத்துக்குடியில் லாரிகளில் கோதுமை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 1:00 AM IST (Updated: 25 Dec 2016 12:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் லாரிகளில் கோதுமை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோதுமை கடத்தல் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இறக்குமத

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் லாரிகளில் கோதுமை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோதுமை கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமைகள் லாரிகள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அந்த லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனுக்கு லாரிகள் மூலம் கோதுமை கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் அந்த குடோனில் கோதுமை இருப்புகளை கணக்கிட்ட போது, அதில் 48 டன் கோதுமை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது குடோனுக்கு லாரிகள் மூலம் கோதுமை கொண்டு வரப்பட்ட போது, 2 லாரிகள் மட்டும் குடோனுக்குள் வராமல் திரும்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணித்த போது, லாரிகள் தூத்துக்குடி 2–ம் சிப்காட் அருகே உள்ள சங்கரப்பேரி காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு லாரியில் இருந்த 2 டிரைவர் மற்றும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் மகன் டேவிட் (வயது 25), முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் முருகன் (21), தூத்துக்குடி பெரியநாயகிபுரத்தை சேர்ந்த ஹரிராமர் (21) என்பதும், அவர்கள் லாரியில் கோதுமையை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கோதுமையின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று கூறப்படுகிறது.


Next Story