தூத்துக்குடியில் 2 பவுன் நகை மாயம்; போலீஸ் விசாரணை


தூத்துக்குடியில் 2 பவுன் நகை மாயம்; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Dec 2016 12:23 AM IST (Updated: 25 Dec 2016 12:23 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு கைலாசபுரத்தை சேர்ந்தவர் முருகன் சாமுவேல். இவருடைய மனைவி சமாதானம் (வயது 49). இவர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை ரெயிலில் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு கைலாசபுரத்தை சேர்ந்தவர் முருகன் சாமுவேல். இவருடைய மனைவி சமாதானம் (வயது 49). இவர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை ரெயிலில் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் உள்ள தனது தங்கை பால்கனி வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வந்த சமாதானம், வடக்கு கைலாசபுரம் செல்லும் பஸ்சுக்கு பதிலாக வேறு பஸ்சில் தெரியாமல் ஏறியுள்ளார். பின்னர் மறுபடியும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு வந்த சமாதானம் தான் கொண்டு வந்த பையை பார்த்துள்ளார்.

அப்போது பையில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமாதானம் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story