புளியங்குடி அருகே பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்து சாவு போலீசார் தீவிர விசாரணை
புளியங்குடியில் பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிடெக்னிக் மாணவர் நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி சங்கர விநாயகர் கோவில் தெருவை
புளியங்குடி,
புளியங்குடியில் பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிடெக்னிக் மாணவர்நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி சங்கர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. அவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (வயது 19). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் ராதாகிருஷ்ணன் உடல் கருகி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
காரணம் என்ன?பின்னர் இதுகுறித்து புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.