பாளையங்கோட்டையில் ரூ.26 கோடியில் புதிய மேம்பாலம் கலெக்டர் ஆய்வு


பாளையங்கோட்டையில் ரூ.26 கோடியில் புதிய மேம்பாலம்  கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2016 12:42 AM IST (Updated: 25 Dec 2016 12:42 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் சிவந்திபட்டி சாலையில் ரூ.26 கோடியே 30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் பணிகளின் போது போக்குவரத்து மாற்றம் செய்வது, மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் க

நெல்லை,

பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் சிவந்திபட்டி சாலையில் ரூ.26 கோடியே 30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் பணிகளின் போது போக்குவரத்து மாற்றம் செய்வது, மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், “புதிய பாலம் கட்டும்போது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாதவாறு மாற்றுப்பாதைகளை அமைக்கவும், பஸ் மற்றும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்று வர போதுமானதாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தேன். மேம்பால பணிகளை விரைவில் தொடங்கப்படும்“ என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், நெல்லை உதவி கலெக்டர் பெர்மி வித்யா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், ரெயில்வே செயற்பொறியாளர் மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஜெயராணி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story