முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி


முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 12:49 AM IST)
t-max-icont-min-icon

கடலூர், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 148 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 4 நாள் பயிற்சி கடலூரில் தொடங்கியது. 148 பேர் தேர்வு முதல்-அமைச்சர் கோ

கடலூர்,

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 148 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 4 நாள் பயிற்சி கடலூரில் தொடங்கியது.

148 பேர் தேர்வு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த நவம்பர் மாதம் 4 நாட்கள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தடகளம், குத்துச்சண்டை, பீச்வாலிபால், பழு தூக்குதல், ஹேண்ட்பால், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக நடைபெற்றன.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 21 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்களில் முதல் இடத்தை பிடித்த மாணவ-மாணவிகள் உள்பட 148 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வுபெற்றனர்.

விளையாட்டு பயிற்சி

தேர்வுபெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 4 நாள் இருப்பிட விளையாட்டு பயிற்சி கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா மேற்பார்வையில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். பின்னர் இது குறித்து விளையாட்டு அதிகாரி ராஜா கூறும்போது, இந்த பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின்னர் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றார்.

Next Story