பவானிசாகர் அருகே போக்கனாக்கரையில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு தயார் மாவட்ட வன அதிகாரி தகவல்
பவானிசாகர் அருகே போக்கனாக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம் ஆகியோரது 2 ஆடுகள் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த போது மர்மவிலங்கு தூக்கி கொண்டு சென்று சாப்பிட்டது. இதனால் மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க அ
பவானிசாகர்,
பவானிசாகர் அருகே போக்கனாக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம் ஆகியோரது 2 ஆடுகள் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த போது மர்மவிலங்கு தூக்கி கொண்டு சென்று சாப்பிட்டது. இதனால் மர்மவிலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் 7 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது. மேலும் சத்தி வன பாதுகாப்பு படை ரேஞ்சர் பழனிச்சாமி தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பொதுமக்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள். ஆனால் மர்மவிலங்கு கேமராவிலும், பொதுமக்கள் கண்ணிலும் சிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள அமராவதிகவுண்டர் என்பவரது வீடு முன்பு கட்டப்பட்டிருந்த ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது.
Next Story