சின்னமனூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 20 நாட்
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் வழங்கக்கோரி நேற்று சின்னமனூர்–கம்பம் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோனிகா, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.