கொடைக்கானல் ஏரிச்சாலையில் நடைபாதையில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கொடைக்கானல் ஏரிச்சாலையில் நடைபாதையில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2016 3:00 AM IST (Updated: 25 Dec 2016 1:16 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள நடைபாதையில் முறிந்து விழுந்துள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பங்கள் கொடைக்கானல் பகுதியில் தற்போது மின்சார வாரியம் சார்பில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்ட

கொடைக்கானல்

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள நடைபாதையில் முறிந்து விழுந்துள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்கம்பங்கள்

கொடைக்கானல் பகுதியில் தற்போது மின்சார வாரியம் சார்பில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏரியை சுற்றிலும் உயர்மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்கம்பங்கள் நட்டு வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய மின் கம்பங்களில் கம்பிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏரிச்சாலையை சுற்றியுள்ள நடைபாதையில் 10–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

மேலும் இரவு நேரத்தில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மின்கம்பங்கள் நடைபாதையில் விழுந்து கிடப்பதை கவனிக்காமல் சென்று கால் தவறி கீழே விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏரிச்சாலை பகுதியில் முறிந்து விழுந்துள்ள மின்கம்பங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story