தேங்காய் உரிக்கும் எந்திரம் வாங்க வந்த கர்நாடக வக்கீலிடம் ரூ.2 லட்சம் பறித்த 2 பேர் கைது


தேங்காய் உரிக்கும் எந்திரம் வாங்க வந்த கர்நாடக வக்கீலிடம் ரூ.2 லட்சம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2016 3:45 AM IST (Updated: 25 Dec 2016 1:29 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய் உரிக்கும் எந்திரம் வாங்க கோவை வந்த கர்நாடக வக்கீலிடம் ரூ.2 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கர்நாடக வக்கீல் கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 55), வக்கீல். இவர்

கோவை,

தேங்காய் உரிக்கும் எந்திரம் வாங்க கோவை வந்த கர்நாடக வக்கீலிடம் ரூ.2 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்நாடக வக்கீல்

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 55), வக்கீல். இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் தென்னை அதிகமாக உள்ளது. அவருக்கு தேங்காய் உரிக்கும் எந்திரம் தேவைப்பட்டது.

இந்த நிலையில் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (50) என்பவர் மாதேகவுடாவுக்கு அறிமுகமானார். இவர், கோவையில் குறைந்த விலைக்கு தேங்காய் உரிக்கும் எந்திரம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதை நம்பி தேங்காய் உரிக்கும் எந்திரம் வாங்குவதற்காக மாதேகவுடா கோவை வர முடிவு செய்தார்.

தேங்காய் உரிக்கும் எந்திரம்

இதற்காக அவர் தனது நண்பர் கெம்பகவுடா (47) உடன் நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் அவர் லோகுவை தொடர்பு கொண்டபோது அவர் கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள அரசு கலைக் கல்லூரி ரோட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் அங்கு சென்றனர்.

அப்போது லோகு ஒரு காரில் தனது நண்பர் சின்னு என்கிற சின்னுச்சாமியுடன் நின்று கொண்டு இருந்தார். பின்னர் அவர்கள் இருவரையும் தனது காரில் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அழைத்துச்சென்று தேங்காய் உரிக்கும் எந்திரத்தை காண்பித்துள்ளார். அப்போது அந்த எந்திரம் ரூ3¼ லட்சம் என்றும் அதற்கு குறைவாக விற்க முடியாது என்றும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

ரூ.2 லட்சம் பறிப்பு

உடனே மாதேகவுடா, கர்நாடகாவில் இந்த எந்திரம் ரூ.3 லட்சத்துக்கு கிடைப்பதால், அதைவிட குறைந்த விலையில் இருந்தால் கூறுங்கள் என்று கூறிஉள்ளனர். பின்னர் லோகு அவர்கள் இருவரையும் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் இறக்கிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரில் பின்னால் வந்த லோகு, சின்னுச்சாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து மாதேகவுடா கையில் பணப்பையை பறித்து விட்டு காரில் தப்பிச்சென்றனர். அந்த பையில் ரூ.2 லட்சம் இருந்துள்ளது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சவுரிபாளையம் அருகே காரில் சென்று கொண்டிருந்த லோகு, சின்னுச்சாமி ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மீட்கப்பட்டது. அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவர் மீதும் வேறு ஏதாவது வழக்கு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story