சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால் கதிர் அறுக்கும் எந்திரம் கவிழ்ந்து 3 பெண்கள் பலி
காங்கேயம் அருகே சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த கதிர் அறுக்கும் எந்திரம் கவிழ்ந்து 3 பெண் தொழிலாளர்கள் பலியானார்கள்.4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கூறப்படுதாவது:– கதிர் அறுக்கும் எந்திரம் ஈரோடு மாவட்டம
காங்கேயம்,
காங்கேயம் அருகே சாலையின் குறுக்கே பாம்பு வந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த கதிர் அறுக்கும் எந்திரம் கவிழ்ந்து 3 பெண் தொழிலாளர்கள் பலியானார்கள்.4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து கூறப்படுதாவது:–
கதிர் அறுக்கும் எந்திரம்ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம் சக்திநகரில் இருந்து நேற்றுகாலை காங்கேயம் அருகே தொட்டியபட்டி என்ற ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் சோளக்கதிர் அறுப்பதற்காக ஒரு டிராக்டரில் கதிர் அறுக்கும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 10 பெண்கள் உள்பட மொத்தம் 13 கூலித்தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
டிராக்டரை காங்கேயம் அருகேயுள்ள ராமலிங்கபுரம் திட்டம்பாளையத்தை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் பரமசிவம் ஓட்டி சென்றுள்ளார். நேற்றுகாலை 11 மணியளவில் காங்கேயம்–சென்னிமலை ரோட்டில் நால்ரோடு என்ற அருகே சென்று கொண்டிருந்தபோது ரோட்டின் நடுவே, ஒரு பாம்பு சென்றுள்ளது. இதனால் பரமசிவம் பாம்பின் மீது மோதாமல் இருக்க வண்டியை சிறிது வளைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து கதிர் அறுக்கும் எந்திரம் ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் சரிந்து விழுந்தனர். இதில் 3 பெண்கள் கதிர் அறுக்கும் எந்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
3 பெண்கள் பலிஇதைத்தொடர்ந்து அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு எந்திரத்தின் அடியில் சிக்கிய பெண்களை மீட்டனர். இருப்பினும் சென்னிமலை புதுப்பாளையம் கிராமம் சக்தி நகரை சேர்ந்த மாரிச்சாமி என்பவரின் மனைவி சரஸ்வதி (30), அதே ஊரை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி சரசாள் என்ற பழனாள் (55) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.
படுகாயமடைந்த முருகன் என்பவரின் மனைவி தாயம்மாள் (57) ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
4 பேர் காயம்மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் (22), கண்ணம்மாள் (35) உள்பட 4 பேர் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 3 பேர் இறந்தது அந்த ஊர் மக்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.