பொங்கலூர்அருகே கார் மரத்தில் மோதி தொழில் அதிபர் பலி


பொங்கலூர்அருகே கார் மரத்தில் மோதி தொழில் அதிபர் பலி
x
தினத்தந்தி 25 Dec 2016 3:30 AM IST (Updated: 25 Dec 2016 1:36 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– தொழில் அதிபர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 35). தொழில் அதிபர். இவர் விய

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தொழில் அதிபர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சுரேஷ்குமார் (வயது 35). தொழில் அதிபர். இவர் வியாபார விசயமாக நேற்று முன்தினம் தனது காரில் கோவை சென்றார். பின்னர் வேலையை முடித்து விட்டு இரவு காரில் பழனிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை சுரேஷ்குமார் ஓட்டினார்.

பல்லடம் – தாராபுரம் சாலையில் வாவிபாளையம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரை ஓட்டி வந்த சுரேஷ்குமார் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காமநாகக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story