ஜெயங்கொண்டத்தில் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் 2–வது நாளாக சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு திருச்சி வருமானவரித்துறை உதவி இயக்குனர் யாசர்அராபத் தலைமையிலன அதிகாரிகள் குழுவினர் திடீரென புகுந்து திட
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் விக்டர் ஏஜென்சீஸ் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு திருச்சி வருமானவரித்துறை உதவி இயக்குனர் யாசர்அராபத் தலைமையிலன அதிகாரிகள் குழுவினர் திடீரென புகுந்து திடீரென சோதனை நடத்தினர். அப்போது எண்ணெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்த விவரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பாமாயில் எண்ணெய் கொள்முதல் செய்த விவரங்கள், நிறுவன வரவு–செலவு கணக்குகள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டனர். மேலும் நிறுவனம் சம்பந்தமான ஆவணங்களையும் சரிபார்த்தனர். இந்த சோதனை கடந்த 2 நாட்களாக விடிய விடிய அந்த நிறுவனத்திலும், அந்நிறுவன உரிமையாளர் வீட்டிலும் நடந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சோதனையை முடித்து கொண்டு அதிகப்படியான கோப்புகளை அதிகாரிகள் எடுத்து சென்றனர். எனவே அது அரசின் கணக்கில் காட்டப்படாத வரவு–செலவு குறித்த ஆவணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும், எண்ணெய் நிறுவன உரிமையாளருக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு தோட்டம் எரிந்து நாசம்குன்னம்,
குன்னம் அருகே புது வேட்டக்குடி துங்கபுரம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் நடராஜன், (வயது 50), வசந்தா (40), ரெங்கசாமி (60), கோவிந்தசாமி (40) அண்ணாதுரை (60) ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் 2½ ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. அதில் தற்போது அறுவடை செய்யும் நிலையில் கரும்பு உள்ளது. இந்நிலையில் நடராஜன் என்பவரது தோட்டத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மின் கசிவு ஏற்பட்டு கரும்பு தோட்டம் தீ பற்றியது. தீ மளமளவென பரவி 5 பேர்களது கரும்பு தோட்டமும் எரிந்து நாசமானது. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் புகழேந்தி (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல்தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமானது.