கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கிராம சுகாதர செவிலியர்களுக்கு படிகளை உடனடியாக வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கிராம சுகாதர செவிலியர்களுக்கு படிகளை உடனடியாக வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:15 AM IST (Updated: 25 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு படிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார

பெரம்பலூர்,

கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு படிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில செயல் தலைவர் கோமதி தலைமை தாங்கினார். மாநில தலைவர் மீனாட்சி முன்னிலை வகித்தார். சந்தானம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், பெரம்பலூரில் பொதுமக்கள் முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர்களை ஆய்வுக்கு வந்த அதிகாரி திட்டியதற்கு கண்டனம் தெரிவிப்பது, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு படிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியரும், மருத்துவரும் இருக்கிற வேளையில் கிராம சுகாதார செவிலியர்களை கருவுற்ற தாய்மார்களை பரிசோதிக்க வலியுறுத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சரோஜா மற்றும் மாநில நிர்வாகிகள் வசந்தி, ஜக்கம்மாள், விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வமணி நன்றி கூறினார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

முன்னதாக கூட்டம் தொடங்கிய போது மறைந்த முன்னாள் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கிராம சுகாதார செவிலியர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story