கரூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார். உத்தரவு சீமைக்கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஆகியவை சார்பில் கரூர் அமராவதி
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.
உத்தரவுசீமைக்கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம், நகராட்சி ஆகியவை சார்பில் கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
நிலத்தடி நீருக்கும், விவசாயிகளுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அகற்ற வேண்டும்முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் நகர பகுதிகளையொட்டி உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி ஆற்றுப்பகுதி, திருமாநிலையூர், வீரராக்கியம் சாலை, புலியூர் மற்றும் காதப்பாறை ஊராட்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடைபெற்று வருகிறது. மிக விரையில் அனைத்து பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.