புதுக்கோட்டையில் தவறான பேக்கிங் தேதியுடன் வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள்
கடைகளில் விற்கப்படும் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாக்கெட் பால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. இந்தநிலையில் புதுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில
புதுக்கோட்டை
கடைகளில் விற்கப்படும் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாக்கெட் பால் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது. இந்தநிலையில் புதுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில் நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பால் பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்ட தேதி 26.12.2016 என தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது 24.12.2016 என்று அச்சிடுவதற்கு பதிலாக, நாளைய தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அந்த பாக்கெட்டுகள் பேக்கிங் செய்யப்பட்ட உண்மையான தேதி தெரியாமல் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story